பிரபாஸ் படத்திற்கு அதிகரித்த மவுசு… பல கோடிக்கு விற்பனையான இந்தி உரிமை!

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் புகழ் உலகம் முழுக்க பரவி விட்டது. அவரின் அடுத்த படத்துக்காக அனைவருமே ஆவலாக காத்துக்கொண்டிருந்த மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சாகோ வின் அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் துரதிஷ்டவசமாக படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணா குமாரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அவரது படத்திற்கான வியாபாரமும் அதிகரித்துள்ளது. பாகுபலி 2 மற்றும் சாகோ படங்கள் ஹிந்தியில் 70  கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வந்தது. தற்போது பிரபாஸ் 20 வது படத்திற்கு முந்தைய படங்களை விட பல கோடி அதிகமாக வியாபரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

பிரபாஸ் படத்திற்கு அதிகரித்த மவுசு… பல கோடிக்கு விற்பனையான இந்தி உரிமை!

தற்காலிகமாக ‘ஓ டியர்’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் 1920 களில் பாரிஸில் நடக்கும் காதல் கதை என்று கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே இந்த படத்தில் வயலின் ஆசிரியராக நடிப்பதாக வதந்தி பரவியுள்ளது. இந்த படம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Share this story