ஷங்கர் – ராம் சரண் பிரம்மாண்ட கூட்டணியில் இவர்தான் வில்லன் ?…

ஷங்கர் – ராம் சரண் பிரம்மாண்ட கூட்டணியில் இவர்தான் வில்லன் ?…

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கும் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் – ராம் சரண் பிரம்மாண்ட கூட்டணியில் இவர்தான் வில்லன் ?…

இயக்குனர் ஷங்கர் தனது முழு கவனத்தையும் ராம் சரணை  வைத்து இயக்கும் படத்தில் திரும்பியுள்ளார். பான் இந்தியா படமாக தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ உருவாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

ஷங்கர் – ராம் சரண் பிரம்மாண்ட கூட்டணியில் இவர்தான் வில்லன் ?…

முதல்வன் படத்திற்கு பிறகு ஷங்கர் இந்த படத்தில் ராம் சரண் இளம் முதல்வராக காட்ட உள்ளார். இந்த படத்தில் பல மொழி பிரபலங்களை களமிறக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் சல்மான் கான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். இதில் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். அதோடு ராம் சரணுக்கு ஜோடியாக பல ஹீரோயின்கள் பரிசீலிக்கப்பட்டதில் கடைசியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் – ராம் சரண் பிரம்மாண்ட கூட்டணியில் இவர்தான் வில்லன் ?…

பெயரிடப்படாதா இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜுன் மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதால் திட்டமிட்டப்படி இந்த ஷூட்டிங்கை தொடங்க முடியுமா என தெரியவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் பிரபல கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் ராம் சரண் – சுதீப் காம்போ படத்தில் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story