தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் மரணம்... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !

krishna

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருத்தவர் கிருஷ்ணா. சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவார். தெலுங்கு முன்னணி நடிகராக இருந்த இவர், கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற படத்தில் நடித்திருந்தார். 

krishna

இதற்கிடையே வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகர் கிருஷ்ணாவிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

krishna

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நடிகர் கிருஷ்ணா உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு தெலுங்கு திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயான கட்டமனேனி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

Share this story