கொரானா பாதிப்பிற்கு பிறகு உடலை பிட்டாக மாற்றும் அல்லு அர்ஜூன்.. வைரலாகும் புகைப்படம்

கொரானா பாதிப்பிற்கு பிறகு உடலை பிட்டாக மாற்றும் அல்லு அர்ஜூன்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அல்லு அர்ஜூன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக கடுமையான உழைத்து இருக்கிறார் அல்லு அர்ஜூன். இரு பாகங்களாக உருவாகும் இப்படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. சுகுமார் இயக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது.

கொரானா பாதிப்பிற்கு பிறகு உடலை பிட்டாக மாற்றும் அல்லு அர்ஜூன்.. வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கொடூர வில்லனாக தோன்றி மிரட்டியுள்ளார். இந்த படத்தின் சில ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கொரானா பாதிப்பிற்கு பிறகு உடலை பிட்டாக மாற்றும் அல்லு அர்ஜூன்.. வைரலாகும் புகைப்படம்

இதற்கிடையே நடிகர் அல்லு அர்ஜூன் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் பூரண நலம்பெற்றார். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரானா பாதிப்பிற்கு பிறகு உடல் மெலிந்து இருந்த அவர், தற்போது தன் உடலை பிட்டாக வைக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story