திட்டமிட்டபடி வெளியாகும் மோகன் லாலின் ‘மரைக்காயர்’.. உறுதிப்படுத்திய படக்குழு !

திட்டமிட்டபடி வெளியாகும் மோகன் லாலின் ‘மரைக்காயர்’.. உறுதிப்படுத்திய படக்குழு !

நடிகர் மோகன் லாலின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மரைக்காயர்’ திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி வெளியாகும் மோகன் லாலின் ‘மரைக்காயர்’.. உறுதிப்படுத்திய படக்குழு !
new stills from the sets of Marakkar: Arabikadalinte Simham

மலையாளத்தில் நடிகர் மோகன் லாலின் அசத்தலான நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக்செல்வன், சுகாசினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திட்டமிட்டபடி வெளியாகும் மோகன் லாலின் ‘மரைக்காயர்’.. உறுதிப்படுத்திய படக்குழு !

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக பெரிய அளவில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படை தலைவனான குஞ்சலி மரைக்காயர் வரலாற்று கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய முடிவு செய்த படக்குழு, பின்னர் கொரானாவால் கைவிட்டது.

திட்டமிட்டபடி வெளியாகும் மோகன் லாலின் ‘மரைக்காயர்’.. உறுதிப்படுத்திய படக்குழு !

இதையடுத்து முதலில் கடந்த மாதம் மார்ச் 26-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தனர். சில காரணங்களால் அந்த தேதி மாற்றப்பட்டு மே 13ம் தேதி வெளியிட முடிவு செய்தனர். ஆனால் கொரானாவின் தாக்கத்தால் படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதற்கிடையே ஓடிடி நிறுவனங்களும் திரைப்படத்தை வாங்க தயாராக உள்ளன. இந்நிலையில் ‘மரைக்காயர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கொரானா தொற்று படிபடியாக குறைந்து வருவதால் திரையரங்கில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

Share this story