தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் நடிகை தீபிகா படுகோன்… முதல் படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்..

தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் நடிகை தீபிகா படுகோன்… முதல் படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்..

‘சாஹோ’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய  மொழிகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் நடிகை தீபிகா படுகோன்… முதல் படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்..
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸின் அடுத்த படத்தை, தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கவுள்ளது. ‘மஹாநடி’  படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நாக் அஷ்வின் இந்தப்படத்தை இயக்குகிறார். இது தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் நடிகை தீபிகா படுகோன்… முதல் படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்..
அதன்படி இந்த படத்தில், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபாஸ் 21 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப்படம் மூலம் தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்..
தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் நடிகை தீபிகா படுகோன்… முதல் படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்..
பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்துவரும் தீபிகா, திருமணத்திற்கு பிறகு நிதானமாகவே கதைகளை தேர்வு செய்து ஒப்பந்தம் செய்கிறார். மேக்னா குல்சார் இயக்கத்தில் சாபக் படத்தில் ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தார். சாபக் படம் மூலம் தீபிகா தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து கணவர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் 83 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்..
தெலுங்கு திரையுலகில் கால்பதிக்கும் நடிகை தீபிகா படுகோன்… முதல் படத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்..
இந்நிலையில் தீபிகா படுகோன், பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அதோடு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.. இந்தப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story