கேஜிஎப் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபாஸ். புதிய தகவல் வெளியானது!

கேஜிஎப் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபாஸ். புதிய தகவல் வெளியானது!

‘சலார்’ படத்திற்கு பிறகு மீண்டும் பிரபாஸும், இயக்குனர் பிரசாந்த் நீலும் இணையவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎப் வெற்றிக்கு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் ‘சலார்’. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ்,மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

கேஜிஎப் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபாஸ். புதிய தகவல் வெளியானது!

விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரானா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சலார் படத்தின் ரிலீஸ் வரும் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎப் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபாஸ். புதிய தகவல் வெளியானது!

இந்நிலையில் ‘சலார்’ படத்திற்கு பிறகு மீண்டும் பிரபாஸுடன், இயக்குனர் பிரசாந்த் நீல் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த தகவல் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் முதற்கட்ட பணிகளை பிரசாந்த் நீல் துவங்கிவிட்டதாகவும், வரும் 2024ம் ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story