புல்லட்டில் செம்ம மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம் !

புல்லட்டில் செம்ம மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம் !

நடிகர் விஜய் தேவரகொண்டா புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புல்லட்டில் செம்ம மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம் !

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் முன்னணி நடிகராக மாறியுள்ள இவரின், ‘கீதா கோவிந்தம்’ படமும் நல்ல பெயரை கொடுத்தது. நடிகையர் திலகம், நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளன. விஜய் தேவரகொண்டாவின் சிறந்த நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

புல்லட்டில் செம்ம மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம் !

ஆனால் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேர்ல்டு பேமஸ் லவர்’ திரைப்படம் தோல்வியை சந்தித்தது. தற்போது ‘லிகர்’ என்ற புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். முன்னணி இயக்குனர் பூரி ஜகன்நாத் இயக்கும் இப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவிருக்கிற இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

புல்லட்டில் செம்ம மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம் !

அதேநேரம் ‘லிகர்’ படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புல்லட்டில் செம மாஸாக உள்ள விஜய் தேவரகொண்டாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story