கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்… மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் பட்டாஸ் நடிகை!

கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்… மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் பட்டாஸ் நடிகை!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை மெஹ்ரீன் பிர்சதா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறாராம்.

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மெஹரீன் பிர்சதா. இவர் தமிழில் தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகன் பவ்யா பிஷ்னோ என்பவர் உடன் திருமணம் நிச்சயம் ஆனது. .

கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்… மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் பட்டாஸ் நடிகை!

சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருந்தார் மெஹரீன். எனவே இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனாவின் காரணமாக திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார் மெஹரீன்.

கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்… மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும் பட்டாஸ் நடிகை!

எனவே மீண்டும் திரைப்படங்களில் நடிக்கக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளராம். புதிய படம் ஒன்றிலும் கமிட் ஆகிவிட்டாராம்.நடிகர் சந்தோஷ் சோபன் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் மெஹரீன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மாருதி என்பவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளாராம்.

Share this story