விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் வீடியோ

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் வீடியோ 

மாடலிங் துறையில் கொடி கட்டி பறந்த ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி  பட்டம் வென்றார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதில் கவனம் செலுத்தினார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வந்த அவர் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. 

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் வீடியோ 

 இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியானது. அபிஷேக் பச்சனின் அக்கா மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் தி ஆர்ச்சிஸ் படத்தின் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் குடும்பத்துடன் பங்கேற்றார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

Share this story