வேற லெவல் படங்களுடன் வெறித்தனம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்!

வேற லெவல் படங்களுடன் வெறித்தனம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்!

தெலுங்கின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் கடைசியாக ஆலவைகுண்டபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். சந்தன மரம், செம்மரம் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

வேற லெவல் படங்களுடன் வெறித்தனம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்!

புஷ்பா படத்தில் ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடித்துள்ளார். புஷ்பா படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. புஷ்பா படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் புஷ்பா திரைப்படம் இரு பாகங்களாக வெளியாக இருக்கிறது.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடித்து முடித்தவுடன் ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் ‘ஐகான்’ என்ற படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார்.

வேற லெவல் படங்களுடன் வெறித்தனம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்!

இந்தப் படங்களை அடுத்து ஏஆர் முருகதாஸ், போயப்பட்டி ஸ்ரீனு, பிரஷாந்த் நீல், கொரட்டலா சிவா உள்ளிட்டோர் இயக்கத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே வரக்கூடிய ஆண்டுகளில் பல பிரம்மாண்ட படங்கள் மூலம் வெறித்தனம் செய்யக் காத்திருக்கிறார் அல்லு அர்ஜுன்!

Share this story