இரு பாகங்களாக உருவாகும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’. தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்

இரு பாகங்களாக உருவாகும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’. தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா’ திரைப்படம் இருபாகங்களாக உருவாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இரு பாகங்களாக உருவாகும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’. தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்

நடிகர் அல்லு அர்ஜூன் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வருகிறது ‘புஷ்பா’. செம்மரம் கடத்தை மையமாக எடுக்கப்படும் இப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இரு பாகங்களாக உருவாகும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’. தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்

மேலும் கன்னட நடிகர் தனஞ்செயா, தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். அடந்த காடு ஒன்றில் செம்மர கடத்தல் நடப்பது போன்று சில முக்கிய காட்சிகளை படமாக்கி அசத்தியுள்ளனர் படக்குழுவினர். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இரு பாகங்களாக உருவாகும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’. தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்

இந்த படம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  ஷூட்டிங் விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புஷ்பா படம் குறித்து புதிய தகவலை படத்தின் தயாரிப்பாளர் ரவிஷங்கர் வெளியிட்டுள்ளார். அதில், சுமார் 250 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரானா காரணமாக நிறுத்தப்பட்ட ஷூட்டிங், தொற்று குறைந்தவுடன் 45 நாட்களில் முடிக்கப்பட்டு விடும். அதனால் சொன்ன தேதியில் வெளியாவது சாத்தியமே என கூறியுள்ளார்.

Share this story