‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக்கில் இருந்து விலகும் மோகன்ராஜா!?

‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக்கில் இருந்து விலகும்  மோகன்ராஜா!?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றதையடுத்து தற்போது சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது.

‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக்கில் இருந்து விலகும்  மோகன்ராஜா!?

இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. முதலில் லுசிபர் தெலுங்கு ரீமேக்கை வேறொரு தெலுங்கு இயக்குனர் தான் இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றிவிட்டு மோகன் ராஜாவை இயக்குனராகப் படத்தில் இணைத்துக்கொண்டார் சிரஞ்சீவி.

தற்போது மோகன்ராஜாவையும் மாற்றிவிட்டு வேறொரு இயக்குனரை சிரஞ்சீவி தேடி வருவதாகத் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன. மேலும் சிரஞ்சீவி தெலுங்கு ரீமேக்கில் பல மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லூசிபர் தெலுங்கு ரீமேக்கின் மீது அதிக வதந்திகள் பரவி வருவதால், படம் குறித்த உண்மைத் தகவலைப் படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்!

Share this story