லிங்குசாமி தெலுங்கு படத்தில் வில்லனாகும் நடிகர் ஆதி ?

லிங்குசாமி தெலுங்கு படத்தில் வில்லனாகும் நடிகர் ஆதி ?

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படத்தில் நடிகர் ஆதி வில்லனாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் லிங்குசாமி. ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ரன், சண்டகோழி உள்ளிட்ட மாபெரும் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடைசியாக இயக்கிய ‘வேட்டை’, ‘சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.

லிங்குசாமி தெலுங்கு படத்தில் வில்லனாகும் நடிகர் ஆதி ?

இதையடுத்து தெலுங்கில் நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ‘உப்பென்னா’ புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் மாதவன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக வந்த தகவலை மறுத்துவிட்டார்.

லிங்குசாமி தெலுங்கு படத்தில் வில்லனாகும் நடிகர் ஆதி ?

இதையடுத்து நடிகர் அருண் விஜய்யிடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் ‘மிருகம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் ஆதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது ஆதி தெலுங்கில் பல படங்களில் நடித்து நன்கு அறிமுகத்தை பெற்று வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story