மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

பாகுபாலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார் ராஜமௌலி. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களாக உள்ள ராம் சரணும் – ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து இப்படத்தில் நடித்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த படத்தின் ஒரு ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், மற்றொரு ஹீரோயினாக ஹாலிவுட் நடிகை ஒருவரும் நடித்து வருகின்றனர்

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

நடிகர் அஜய் தேவ்கன் வில்லினாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் நடிகர் சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக உருவாக இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை டிவிவி தானய்யாவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெறுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் 325 கோடிக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

வரும் அக்டோபர் 13ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்ததது. ஆனால் கொரானா 2வது அலையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வெளியாகலாம் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் ஜுலை 1ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க ராஜமௌலி முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது. தற்போது இரு பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இதில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் 30 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த பாடலை பிரம்மாண்டமாக எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Share this story