வெளியானது ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ டிரெய்லர். பார்க்கவே ரொம்ப டேஞ்சரா இருக்கு

வெளியானது ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ டிரெய்லர். பார்க்கவே ரொம்ப டேஞ்சரா இருக்கு

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ராம் கோபால் வர்மா அளவிற்கு மெகா ஹிட் படங்களை எடுப்பதற்கு இதுவரை யாரும் இல்லை. அவர் இயக்கிய சத்யா, கம்பெனி, சர்கார், ரங்கீலா போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றன. இவர் யோசிக்கும் கதை அனைத்துமே டார்க் மோடில்தான் இருக்கும். ரத்தம் தெறிக்க தெறிக்க உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

வெளியானது ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ டிரெய்லர். பார்க்கவே ரொம்ப டேஞ்சரா இருக்கு

இவ்வளவு புகழ்பெற்ற இயக்குனரான ராம் கோபால் வர்மா, வருடத்திற்கு 5 படங்கள் மேல் தற்போது எடுத்து வருகிறார். அது வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. இந்த வருடம் மட்டும் இதுவரை 3 படங்களை இயக்கியுள்ளார். அதில் முக்கியமானதாக கருதப்படும் ‘டி கம்பெனி’ திரைப்படம் ஸ்பார்க் ஓடிடி தளத்தில் வரும் மே 16ம் தேதி வெளியாகிறது.

வெளியானது ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ டிரெய்லர். பார்க்கவே ரொம்ப டேஞ்சரா இருக்கு

இந்நிலையில் அவரின் அடுத்த படைப்பாக வெளியாக உள்ள திரைப்படம் ‘டேஞ்சரஸ்’. இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படமாக கருதப்படும் இப்படத்தில் லெஸ்பின்களாக  நயினா கங்குலியும், அப்ஸராவும் நடித்துள்ளனர். ஆண்களால் ஏமாற்றப்பட்ட இரு பெண்களின் காதலில் ஏற்படும் பிரச்சனையை க்ரைம் த்ரில்லரில் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பார்க்கவே ரொம்பவும் டெரராக உள்ள இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Share this story