திரிஷ்யம் 2 வெளியிட எதிர்ப்பு… சர்ச்சையாகும் ஓடிடி ரிலீஸ்…

திரிஷ்யம் 2 வெளியிட எதிர்ப்பு… சர்ச்சையாகும் ஓடிடி ரிலீஸ்…

‘திரிஷ்யம் 2’ ஓடிடியில் வெளியாவதால் திரையரங்குகளில் வெளியாக அனுமதிக்கமட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் ‘திரிஷ்யம்’.  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. தமிழில் கமல் நடித்து பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகி மலையாளத்தை போன்று மற்ற மொழிகளிலும் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது. சீன‌மொழியிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

திரிஷ்யம் 2 வெளியிட எதிர்ப்பு… சர்ச்சையாகும் ஓடிடி ரிலீஸ்…

முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து பிறகு திரிஷ்யம் 2 வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஓடிடியில் வெளியிடப்படும் அதே தேதியில் திரிஷ்யம் 2 படத்தை திரையரங்கிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

திரிஷ்யம் 2 வெளியிட எதிர்ப்பு… சர்ச்சையாகும் ஓடிடி ரிலீஸ்…

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கம், திரிஷ்யம் 2 படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது.இனி ஓ.டி.டியில் வெளியாகும் எந்த படத்தையும் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.

Share this story