தெலுங்கு திரையுலகில் சோகம்… பிரபல எழுத்தாளர் கொரோனவால் பலி!

தெலுங்கு திரையுலகில் சோகம்… பிரபல எழுத்தாளர் கொரோனவால் பலி!

தெலுங்கு இயக்குனரும் எழுத்தாளருமான நந்தியால ரவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மட்டுமில்லாமல் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையின் அதிகரித்து வருகிறது. திரைத்துறையிலும் கொரோனாவால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை பாடகர் கோமகன், நடிகர் பாண்டு, மாறன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் சோகம்… பிரபல எழுத்தாளர் கொரோனவால் பலி!

தெலுங்கு திரையுலகில் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான நந்தியாலா ரவி கொரோனவால் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நந்தியாலா ரவி தெலுங்கில் பல படங்களுக்கு எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். ‘இண்டிகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Share this story