‘கிங் ஆஃப் கோதா’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

photo

துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

photoதென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், நடிப்பில் வெளியான படம்கிங் ஆஃப் கோதா’. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்திருந்தார். இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரைபுகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக  படத்தில் இடம் பெற்ற ‘கலாட்டாக்காரன்’ படலுக்கு ரித்திகா சிங் மற்றும் துல்கர் ஆடிய நடத்தைபோலவே  பலரும் ரீல் செய்து ட்ரெண்ட் செய்தனர்.

photo

இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி படம் வரும் 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளது.

 

 

Share this story