கிரிக்கெட் பயிற்சியாளராகக் களமிறங்கும் மகேஷ் பாபு!?

கிரிக்கெட் பயிற்சியாளராகக் களமிறங்கும் மகேஷ் பாபு!?

தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு மீண்டும் இயக்குனர் அனில் ரவிபுடி உடன் மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மகேஷ் பாபுவுக்கு ‘சரிலேரு நீகேவரு’ என்ற மெஹாஹிட் படம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபு தற்போது பரசுராம் இயக்கத்தில் ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து அவர் அனில் ரவிபுடி உடன் கூட்டணி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் பயிற்சியாளராகக் களமிறங்கும் மகேஷ் பாபு!?

மேலும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு கிரிக்கெட் பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் இந்தியா முழுக்க வெளியாகும் பான் இந்தியா படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மகேஷ் பாபு கிரிக்கெட் பயிற்சியாளர் என்றால் இது கண்டிப்பாக ஸ்போர்ட்ஸ் கதைக்களம் கொண்ட படமாகத் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர் அனில் ரவிப்புடி ‘எஃப் 3’ படத்தின் பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார்.

Share this story