ஸ்லிம் தோற்றத்திற்கு மாறிய நிவின் பாலி... இணையத்தை கலக்கும் புகைப்படம் !

Nivin Pauly

நடிகர் நிவின் பாலி ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. பிரேம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘தி மெட்ரோ’, ‘தட்டத்தின் மரையத்து’, ‘புதிய தீரங்கள்’, ‘1983’, ‘பெங்களூரு டேஸ்’, ‘இவ்டே’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

Nivin Pauly

தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தையடுத்து ராம் இயக்கதில் ‘எழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாளத்தை தவிர்த்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

Nivin Pauly

இதற்கிடையே சமீபகாலமாக வெளியான நிவின் பாலியின் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் அதிக எடையுடன் நிவின் பாலி இருந்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் தற்போது உடல் இளைத்து ஸ்லிம் தோற்றத்தில் ஸ்டைலான இருக்கும் நிவின் பாலியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Share this story