மனைவியை பிரிந்த ‘ஜெயிலர்’ நடிகர்... காரணம் என்ன தெரியுமா ?

பிரபல மலையாள நடிகர் விநாயகன், தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் விநாயகன். மலையாள நடிகராக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு சிம்புவின் ‘சிலம்பாட்டம்’, ஆர்கே நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ உள்ளிட்ட படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மனைவி பபிதாவை பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் எனக்கும், என் மனைவிக்கும் இடையிலான திருமண உறவு முடிவுக்கு வருவதாக அவர் கூறியுள்ளார். திடீரென விநாயகன், மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.