மோகன்லால் இயக்குனராகக் களமிறங்கும் பிரம்மாண்டப் படம்… இன்று பூஜையுடன் துவங்கியது!

மோகன்லால் இயக்குனராகக் களமிறங்கும் பிரம்மாண்டப் படம்… இன்று பூஜையுடன் துவங்கியது!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகும் பாரோஸ் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

‘பரோஸ் – கார்டியன் ஆஃப் டி’காமாவின் புதையல்’ என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படம் மோகன்லாலின் சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைய உள்ளது. ஏனெனில் அவர் தனது 43 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதன்முறையாக இயக்குனராகக் களமிறங்குகிறார்.

மோகன்லால் இயக்குனராகக் களமிறங்கும் பிரம்மாண்டப் படம்… இன்று பூஜையுடன் துவங்கியது!

இந்தப் படம் 3டி டெக்னாலஜியில் பேண்டஸி படமாக உருவாகிறது. ஆஷிர்வாட் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். ஏஆர் ரஹ்மானின் மாணவர் லிடியன் நாதஸ்வரம் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகர்கள் ரபேல் அமர்கோ மற்றும் பாஸ் வேகா ஆகியோர் வாஸ்கோ டா காமா மற்றும் அவரது மனைவியின் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். நடிகர் ப்ரித்வி ராஜும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story