அனல் பறக்கும் அரசியல் களத்துடன் களமிறங்கியுள்ள நிவின் பாலி!

அனல் பறக்கும் அரசியல் களத்துடன் களமிறங்கியுள்ள நிவின் பாலி!

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘துரமுகம்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. மலையாளத்தில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கம்மட்டிபாடம்’ என்ற படத்தை இயக்கிய ராஜீவ் ரவி 5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எனவே படத்தில் ஆழமான அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

பூர்ணிமா இந்திரஜித், இந்திரஜித் சுகுமாரன், அர்ஜுன் அசோகன், நிமிஷா சஜயன், சுதேவ் நாயர், மணிகண்டன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுகுமார் என்பவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அனல் பறக்கும் அரசியல் களத்துடன் களமிறங்கியுள்ள நிவின் பாலி!

இந்தப் படம் ‘துரமுகம்’ என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கே.என்.சிதம்பரம் இந்த நாடகத்தை எழுதியிருந்தார். அவரின் மகன் கோபன் சிதம்பரத்தின் உதவியுடன் இந்த நாடகம் திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது.

1950-களில் கொச்சி துறைமுகத்தில் பின்பற்றப்பட்ட சப்பா அமைப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

முதலாளிகள் வீசி எரியும் செப்புக் காசுகளை கைப்பற்றுபவர்களுக்கே வேலை உண்டு என்ற முறை அப்போது நடந்து வந்தது. இந்த முறையை எதிர்த்து பலர் போராட்டம் செய்தனர். பின்னர் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பெரும் கலவரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

அனல் பறக்கும் அரசியல் களத்துடன் களமிறங்கியுள்ள நிவின் பாலி!

நிவின் பாலி இந்தப் படத்தில் கேரளாவின் மட்டஞ்சேரியைச்சேர்ந்த துறைமுகத் தொழிலாளியாக நடித்துள்ளார். நிவின் பாலியின் முரட்டுத் தனமான தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டீசரில் அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்றிருந்தன. நிவின் பாலி தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். எனவே படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பலர் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.

Share this story