மாஸ் காட்டும் ‘அல்லு அர்ஜுன்’ – புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு…

மாஸ் காட்டும்  ‘அல்லு அர்ஜுன்’ – புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மாஸ் காட்டும்  ‘அல்லு அர்ஜுன்’ – புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் புஷ்பா. சுமார் 100கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

மாஸ் காட்டும்  ‘அல்லு அர்ஜுன்’ – புஷ்பா ரிலீஸ் தேதி அறிவிப்பு…

முழுக்கமுழுக்க செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மூன்று வில்லன்கள் நடிக்கும் இப்படத்தில் ஒரு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. பின்னர் இந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். கன்னட நடிகர் தனஞ்செயா ஒரு வில்லனாக நடிக்கிறார். மற்றொரு வில்லனாக தெலுங்கு காமெடி நடிகர் சுனில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ளார்.

Share this story