பிரபாஸ் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

பிரபாஸ் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகை ராஷி கண்ணா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை ராஷி கண்ணா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கால் தடம் பதித்துவிட்ட அவர் தற்போது பாலிவுட்டிலும் முன்னேறி வருகிறார்.

பிரபாஸ் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் ஷாஹித் கபூர் உடன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரிஸிலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபாஸ் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

தற்போது ராஷி கண்ணா பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படத்தில் ராஷி கண்ணாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்தப் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். மூன்றாம் உலகப் போரை அடிப்படியாக வைத்து இப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this story