சொன்ன தேதியில் வெளியாகுமா ஆர்.ஆர்.ஆர்… கடும் நெருக்கடியில் ராஜமௌலி…

சொன்ன தேதியில் வெளியாகுமா ஆர்.ஆர்.ஆர்… கடும் நெருக்கடியில் ராஜமௌலி…

திட்டமிட்டப்படி ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டிருக்கிறார் ராஜ மௌலி.

சொன்ன தேதியில் வெளியாகுமா ஆர்.ஆர்.ஆர்… கடும் நெருக்கடியில் ராஜமௌலி…

பாகுபலிக்கு பிறகு தனது படங்களில் பிரம்மாண்டத்தை காட்ட நினைக்கிறார் ராஜமௌலி. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அப்படிதான் இருக்கிறது. அந்த வகையில் ராஜமௌலி அடுத்து இயக்கி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராம் சரணும் – ஜூனியர் என்.டி.ஆர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்துள்ளது.

சொன்ன தேதியில் வெளியாகுமா ஆர்.ஆர்.ஆர்… கடும் நெருக்கடியில் ராஜமௌலி…

மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை பிரபல நிறுவனமான லைக்கா பெற்றுள்ளது.

சொன்ன தேதியில் வெளியாகுமா ஆர்.ஆர்.ஆர்… கடும் நெருக்கடியில் ராஜமௌலி…

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி தசரா விழாவையொட்டி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்யமுடியாத நிலையில் ராஜமௌலி உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் ராம் சரணும், ஜுனியர் என்டிஆரும் சொன்னப்படி கலந்துக்கொள்ளவில்லை. இவர்கள் இணைந்து நடிக்கும் காட்சிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்திருந்தால்தான் சொன்னபடி ரிலீசாகியிருக்கும். எதுமே நடக்காத பட்சத்தில் அக்டோபர் மாதத்தில் உறுதியாக ரிலீசாகாது என படக்குழுவிலிருந்து தகவல் கசிந்துள்ளது. இதனால் வரும் 2022-ல் இந்த படம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

Share this story