‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ராஜமௌலியின் பிரம்மாண்ட திட்டம். அடாவடி செய்யும் பிரபல பாலிவுட் நடிகை

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ராஜமௌலியின் பிரம்மாண்ட திட்டம். அடாவடி செய்யும் பிரபல பாலிவுட் நடிகை

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ராஜமௌலி எடுக்கவிருக்கும் காட்சியில் நடிப்பதற்காக புதிய கன்டிஷனை நடிகை ஆலியா பட் போட்டுள்ளதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ராஜமௌலியின் பிரம்மாண்ட திட்டம். அடாவடி செய்யும் பிரபல பாலிவுட் நடிகை

வரலாற்று படத்தை எடுப்பதில் கைதேர்ந்தவரான ராஜமௌலி, தனது அடுத்த படைப்பான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். தெலுங்கு உலகில் பிரபல நடிகர்களாக உள்ள ராம் சரணும் – ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், மற்றொரு ஹீரோயினாக ஹாலிவுட் நடிகை ஒருவரும் நடித்து வருகின்றனர்

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ராஜமௌலியின் பிரம்மாண்ட திட்டம். அடாவடி செய்யும் பிரபல பாலிவுட் நடிகை

நடிகர் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சமுத்திரகனியும் இப்படத்தில் நடிக்கிறார். இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக உருவாக இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை டிவிவி தானய்யாவின் நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ராஜமௌலியின் பிரம்மாண்ட திட்டம். அடாவடி செய்யும் பிரபல பாலிவுட் நடிகை

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 13ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரானா 2வது அலையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியை உருவாக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். அதற்காக ஒரு பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் படத்தில் நடிக்கும் அனைவரையும் வைத்து ஒரு பாடலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த காட்சியில் நடிக்கவேண்டுமென்றால் அனைவரின் கொரானா பரிசோதனை வந்த பிறகே நடிப்பேன் என தடாலடியாக கூறிவிட்டாரம் படத்தின் ஹீரோயின் ஆலியா பட். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Share this story