யுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்!

யுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’  படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்!

தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி தினத்தை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இன்று தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி தெலுங்கு மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு டோலிவுட் திரையுலகினர் படங்களின் ஸ்பெஷல் அப்டேட்களை வெளியிட்டு மக்களுக்கு ட்ரீட் வைத்து வருகின்றனர்.

யுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’  படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்!

‘ராதே ஷ்யாம்’ படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் யுகாதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம் பெற்றுள்ள ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் மக்கள் ஆர்ப்பரிக்க கொண்டாடப்படும் படியாக காணப்படுகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யுகாதி தினத்தை சிறப்பாக்கிய ‘ஆர்ஆர்ஆர்’  படக்குழு… மக்கள் ஆர்ப்பரிப்பில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்!

இப்படத்தில் ராம் சரண் அல்லூரி ராமராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர்ம், கொமாராம் பீம் ஆகவும் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகை ஆலியா பாட், ராம் சரணுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கின்றார்.

இப்படம் இந்தாண்டு அக்டோபர் 13-ம் தேதி வெளியாகிறது. படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பாகுபலி ரெக்கார்டுகளை ஆர்ஆர்ஆர் முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Share this story