நானி படத்தில் மீண்டும் நடிக்கும் சத்யராஜ்!

நானி படத்தில் மீண்டும் நடிக்கும் சத்யராஜ்!

நடிகர் சத்யராஜ் தெலுங்கில் நானி தயாரிக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

நடிகர் சத்யராஜ் தமிழைப் போலவே தெலுங்கிலும் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். சத்யராஜைத் தவிர வேறு யாரையும் கட்டப்பாவாக நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்திருந்தார்.

நானி படத்தில் மீண்டும் நடிக்கும் சத்யராஜ்!

அதையடுத்து நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்சி’ படத்திலும் அவரது பயிற்சியாளராக சிறப்பாக நடித்திருந்தார். அந்தப் படத்திலும் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

தற்போது மீண்டும் நானி உடன் கூட்டணி அமைக்க உள்ளார். ஆம், நானி தயாரிக்கும் புதிய படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ப்தி காந்தா என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நானி படத்தில் மீண்டும் நடிக்கும் சத்யராஜ்!

நானி மற்றும் பிரசாந்தி திப்பிர்னேனி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ‘மீட் க்யூட்’ என்று இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மீட் க்யூட் ஒரு பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட திரைப்படமா. இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சத்யராஜும் கலந்துகொண்டார்.

Share this story