மீண்டும் ராம் சரணுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை ? ஷங்கர் படத்தின் அப்டேட்

மீண்டும் ராம் சரணுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை ? ஷங்கர் படத்தின் அப்டேட்

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ராம் சரணுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை ? ஷங்கர் படத்தின் அப்டேட்

‘இந்நியன் 2’ படப் பிரச்சனை ஓரமாக ஒதுக்கி வைத்து தற்போது ராம் சரண் படத்தின் பணிகளில் வேகமாக ஈடுபட்டுள்ளார் ஷங்கர். ‘முதல்வன்’ படத்திற்கு பிறகு இந்த படம் அரசியல் கலந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் முதல்முறையாக ராம் சரண் இளம் முதலமைச்சராக நடிப்பதாக தகவல் வெளியானது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.

மீண்டும் ராம் சரணுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை ? ஷங்கர் படத்தின் அப்டேட்

மேலும் இந்த படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5மொழிகளில்‌ இப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மீண்டும் ராம் சரணுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை ? ஷங்கர் படத்தின் அப்டேட்

இந்நிலையில் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்கள் குறித்து தகவல் அடிக்கடி கசிந்து வந்தது. அந்த வகையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் ‘ஆர்.ஆர்.ஆர்‘ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் ஆலியா பட்டை நடிக்க வைக்க ராம் சரண் பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

Share this story