அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி…

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி…

ஹீரோ, வில்லன்,  நண்பன், அப்பா, திருநங்கை என கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த எந்த கேரக்டர்களிலும் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.. படத்திற்காக உடம்பைக் குறைக்கனும், தோற்றத்தை மாற்றனும் என்று இல்லாமல் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி…
இவர் தற்போது, தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அதோடு இவர் அடுத்து அரசியல் வாதியாக நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  சினிமாவுக்கும் வந்த 10 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்துக் குவித்துள்ளார் விஜய் சேதுபதி.. மேலும் ஒரே சமயத்தில் பல படங்களில் நடிப்பார் என்பதால், கைவசம் எப்போதும் பல படங்களை வைத்திருப்பார்..
அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி…
அப்படி அவர் ஒப்பந்தமாகியிருந்த புஷ்பா படத்திலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளார்..
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்பாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா.. இயக்குநர் சுகுமார் இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில்  ரஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். இது ஆந்திர காட்டுப்பகுதிகளில் அதிகம் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றிய கதை என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி…
இந்நிலையில் தற்போது கைவசம் அதிக  படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி,  கால்ஷீட் பிரச்சினை காரணமாகத்தான் புஷ்பா படத்தில் இருந்து வெளியேறி விட்டாதாக கூறியிருக்கிறார். அல்லு அர்ஜுன் மிகப்பெரிய நடிகர் எனவும், கடைசி நேரத்தி தன்னால் அந்தப்படம் சொதப்பிவிடக் கூடாது என்பதற்காக நேரில் சென்று இந்த தகவலைச் சொல்லிவிட்டு வந்ததாகவும் கூறினார்.  மேலும் சிறந்த கதை, பெரிய இயக்குநர்.. இந்தப் படத்திலிருந்து வெளியேறியதற்கு வருத்தப்படுவதாகவும்  விஜய் சேதுபதி நேர்காணலில்  தெரிவித்திருக்கிறார்..
அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி…
இதனையடுத்து விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி நடிகரை தேர்வு செய்ய புஷ்பா படக்குழு முயற்சித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியை வில்லனாக நடிக்க வைக்க புஷ்பா படக்குழு யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this story