நேரடியாக தமிழில் களமிறங்கும் அல்லு அர்ஜூனா ..! யாருக்கு ‘செக்’ வைக்கப்போறார் தெரியுமா.!?

நேரடியாக தமிழில் களமிறங்கும் அல்லு அர்ஜூனா ..! யாருக்கு ‘செக்’ வைக்கப்போறார் தெரியுமா.!?

தெலுங்கு சினிமாவில் நாளது தேதிப்படி கிட்டத்தட்ட நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூனா. நம்ம ஊர் அஜித், விஜய்க்கு இணையான பாப்புலாரிட்டியும் பிஸினஸ் வேல்யூவும் உள்ள ஹீரோ. இவருக்கு சொந்தமான ‘ஆஹா’ என்கிற OTT பிளாட் ஃபார்ம் தான் ஆந்திராவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

நேரடியாக தமிழில் களமிறங்கும் அல்லு அர்ஜூனா ..! யாருக்கு ‘செக்’ வைக்கப்போறார் தெரியுமா.!?

குறிப்பாக இந்த லாக்டவுன் பீரியடில் முன்னணி OTT பிளாட் ஃபார்ம் எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி கார்ப்பரேட் நிறுவங்களை கதற விட்டது பற்றித்தான் ஆந்திரா முழுக்க பேச்சாக இருக்கு. அமேஸான், நெட் ஃபிலிக்ஸ் தளங்களுக்கு நம்ம ஊர் முன்னணி ஹீரோக்கள் படங்களைக் கொடுப்பது போல் அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் படங்கள் எல்லாமே ‘ஆஹா’ OTT-யில் வெளியிடுகிறார்கள்.

நேரடியாக தமிழில் களமிறங்கும் அல்லு அர்ஜூனா ..! யாருக்கு ‘செக்’ வைக்கப்போறார் தெரியுமா.!?

தெலுங்கில் அதிரடி காட்டியதைத் தொடர்ந்து ‘ஆஹா’ தமிழுக்கும் வருகிறது. சென்னையில் அலுவலகம் போட்டு அதற்கான முன்னெடுப்பு வேலையில் இறங்கியிருக்கிறார் அல்லு அர்ஜூனா. வருகிற ஏப்ரல் முதல் ‘லைவ்’க்கு வருகிறது. படங்கள் வாங்கி ரிலீஸ் பண்ணுகிற கையோடு வெப் சீரிஸும் பண்ணுகிற பிளானில் இருக்கிறார்களாம். ஆபிஸ் போட்டு ஒரு வாரம்தான் ஆகிறது, அதற்குள் பல முன்னணி இயக்குனர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எல்லாம் ஃபைனலான பிறகு பிரம்மாண்டமாக அறிவிப்பு வருமாம்.

நேரடியாக தமிழில் களமிறங்கும் அல்லு அர்ஜூனா ..! யாருக்கு ‘செக்’ வைக்கப்போறார் தெரியுமா.!?

குறுகிய காலத்தில் இப்படியொரு வெற்றி எப்படி சாத்தியம் என்று ஆந்திரா இண்டஸ்ட்ரி ஆட்களிடம் கேட்டால், அல்லு அர்ஜூனாவே நேரடியாக படம் பற்றி அதில் ஒர்க் பண்ணும் கடைநிலை டெக்னீஷியன்களிடம் கேட்டு படங்களை தட்டித் தூக்குகிறாராம். அதனால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Share this story