மணிரத்னம் பட பாடலில் நடித்துள்ள பிரபல நடிகரின் மகள்!

மணிரத்னம் பட பாடலில் நடித்துள்ள பிரபல நடிகரின் மகள்!

நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா அஞ்சலி பட பாடலின் மறுஉருவாக்கத்தில் நடித்துள்ளார்.

1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி மற்றும் பேபி ஷாம்லி நடிப்பில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அவர் இசையமைத்த 500-வது படமாகும். மேலும் இப்படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது. ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது.

மணிரத்னம் பட பாடலில் நடித்துள்ள பிரபல நடிகரின் மகள்!

இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘அஞ்சலி அஞ்சலி’ பாடல் மிகவும் பிரபலம். இப்போதும் கூட பலரது பிளேலிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா அஞ்சலி பாடலின் கவர் சாங்கில் நடித்துள்ளார்.

மணிரத்னம் பட பாடலில் நடித்துள்ள பிரபல நடிகரின் மகள்!

அர்ஹா மிகவும் நன்றாக நடித்துள்ளார். முக பாவனைகள், உணர்ச்சிகள் என அனைவரையும் ஆச்சார்யப்படுத்தியுள்ளார் அர்ஹா.

இந்தப் பாடல் அல்லு அர்ஜுனின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

Share this story