Friday, March 5, 2021

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… கார்த்தி படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியீடு!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியாக உள்ளது. சிம்பு கோலிவுட்டின் பன்முகத்திறமை கொண்ட நடிகர்...

Movie Stills

ஹிந்தி ரீமேக்கில் ஆல்டர்ரேஷன் எல்லாம் செய்துவிட்டு அபிட்டான அமீர்கான்!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ”விக்ரம் வேதா” .இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்திருப்பர்.

vikaram vedha

இந்த படம் தமிழில் நல்ல ஹிட் அடித்ததால் இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி பாலிவுட்டில் நடிகர் ஷாருகானிடம் படத்தின் இந்தி ரீமேக் குறித்து இயக்குனர் புஷ்கர் காயத்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த படத்தில் ஆர்வம் காட்டாத சாருக் கான் படத்தை புறக்கணித்துவிட்டார். அதன் பின்னர் நடிகர் அமீர்கானிடமும் சைப் அலிகானிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அவர்கள் ஒப்புக்கொள்ளவே, விஜய்சேதுபதி கேரக்டரில் அமீர்கானும், மாதவன் கேரக்டரில் சைப் அலிகானும் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது.

இப்படத்திற்கு முதலில் ஒப்பந்தமாக விருப்பம் தெரிவித்த அமீர்கான் கதையில் சில மாற்றங்களையும் செய்திருந்தார்.

கதையின் மாற்றங்கள் எல்லாம் முடிவு செய்யப்பட்டு ஆரம்பிக்க இருந்த நிலையில் கொரோனா காலகட்டம் படத்தை தள்ளிவைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் படத்தின் மீது ஆர்வம் குறைந்த அமீர்கான் தற்போது விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் புஷ்கர் காயத்ரி குழப்பத்தில் உள்ளார். படத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு, அமீர்கான் படத்திலிருந்து விலகி உள்ளது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… கார்த்தி படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியீடு!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் சிம்பு பாடியுள்ள பாடல் இன்று வெளியாக உள்ளது. சிம்பு கோலிவுட்டின் பன்முகத்திறமை கொண்ட நடிகர்...

ராக்கி பாய்-க்கே ஃடப் கொடுக்கும் மாஸ் லுக்கில் செல்வராகவன்… பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அனுராக் காஷ்யப், டாப்ஸி அலுவலகங்களில் நடந்த வருமான வரிச் சோதனை… 650 கோடி சிக்கியது!?

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய வருமான வரிச் சோதனையில் கிட்டத்தட்ட 650 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்....

விரைவில் விஜய், சிவகார்த்தியேன் படத்தில் பணியாற்றுவேன்… பிரபல இசையமைப்பாளர் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

இசையமைப்பாளர் எஸ் தமன், விரைவில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். எஸ் தமன் தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். தமிழில்...

Actress

TTN Cinema