மோகன்லாலின் மகள் எழுதியுள்ள புத்தகத்தைப் புகழ்ந்த அமிதாப் பச்சன்!

மோகன்லாலின் மகள் எழுதியுள்ள புத்தகத்தைப் புகழ்ந்த அமிதாப் பச்சன்!

மோகன்லாலின் மகள் விஸ்மயா எழுதியுள்ள க்ரைன்ஸ் ஆப் ஸ்டார்டம் புத்தகத்தைப் பாராட்டி அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார்.

மோகன்லால் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது அனைவர்க்கும் தெரியும். மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் எழுதிய ‘க்ரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் புத்தகத்திற்கு பல பிரபலங்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் கிடைத்து வருகின்றன.

மோகன்லாலின் மகள் எழுதியுள்ள புத்தகத்தைப் புகழ்ந்த அமிதாப் பச்சன்!

தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மாயா மோகன்லால் எழுதிய புத்தகத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் “மோகன்லால், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். எனது மிகவும் அபிமானமான நடிகர்களின் ஒருவர். அவரது மகள் விஸ்மயா எழுதிய “கிரேன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் என்ற புத்தகத்தை அனுப்பியுள்ளார். கவிதைகள் மற்றும் ஓவியங்களின் மிகவும் ஆக்கபூர்வமான உணர்திறன் பயணம். பாரம்பரியத்திலே வந்த திறமை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மோகன்லால் “ஒரு ஆளுமையிடமிருந்து வரும் பாராட்டு வார்த்தைகள் மாயா பெறக்கூடிய ஆசீர்வாதம்! என்னைப் பொறுத்தவரை இது ஒரு தந்தையாக பெருமைமிக்க தருணம். நன்றி அமிதாப் பச்சன் சார்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story