ஒரு லெஜெண்ட் இல்லாமல் எப்படி பிரம்மாண்ட படம் எடுக்க முடியும்? பிரபாஸ் படத்தில் இணைந்த அமிதாப் பச்சன்!

ஒரு லெஜெண்ட் இல்லாமல் எப்படி பிரம்மாண்ட படம் எடுக்க முடியும்? பிரபாஸ் படத்தில் இணைந்த அமிதாப் பச்சன்!

பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் பிரபாஸ் 21 படத்தில் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார்.

‘மஹாநடி’ இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். தற்போது இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். ஒரு லெஜெண்ட் இல்லாமல் எப்படி ஒரு லெஜண்டரி படத்தை எடுக்க முடியும். எனவே தான் ஒரு லெஜெண்டை எங்கள் படத்தில் இணைத்துள்ளோம் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘பிரபாஸ் 21’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப்படம் மூலம் தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

பிரபாஸ் 21 படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் கற்பனை மூன்றாம் உலகப்போரில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு நடனக் கலைஞராக நடிக்கிறாராம்.

Deepika Padukone



“மறைந்த என்.டி.ஆர் அவர்கள் அமிதாப் பச்சனின் அபிமானியாக இருந்தார், மேலும் அவரது சில சூப்பர்ஹிட் பாலிவுட் படங்களின் தெலுங்கு ரீமேக்குகளில் கூட நடித்திருந்தார். என்.டி.ஆரின் ராமகிருஷ்ணா தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய ‘ஷோலே’ படத்தை ​​ஸ்ரீ என்.டி.ஆரும் நானும் பல முறை பார்த்தோம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஐகானான அமிதாப் பச்சனை எங்கள் மதிப்புமிக்க வைஜயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பின் ஒரு பகுதியாக வரவேற்பது உண்மையிலேயே மிகவும் திருப்திகரமான தருணம். இது ஸ்ரீ என்.டி.ஆர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ஒரு தயாரிப்பு நிறுவனமாகும், மேலும் அவரால் பெயரிடப்பட்டது, ”என்றும் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறியுள்ளார்.

Nag Ashwin


“பச்சன் சார் தான் நடித்துக் கொண்டிருக்கும் பல படங்களுக்கு மத்தியில் எங்கள் படத்திலும் நடிப்பது என்னுடைய அதிர்ஷ்டம் மற்றும் பாக்கியம் என்று நினைக்கிறேன் … இது ஒரு முழு நீள கதாபாத்திரமாகும், அதுதான் ஒரு லெஜெண்டுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதையை என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Share this story