‘அம்மன்’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !…

‘அம்மன்’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !…

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘அம்மன்’ சீரியலில் பிக்பாஸ் நடிகை இணைந்துள்ளார்.

‘அம்மன்’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !…

மற்ற தொலைக்காட்சிக்கு போட்டியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கலர்ஸ் தமிழில் தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி தொடர் ‘அம்மன்’. இந்த சீரியல் சக்தி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகர்கிறது. சக்தி கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா கௌடா நடித்து வருகிறார்.

‘அம்மன்’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !…

சக்திக்கு ஜோடியாக ஈஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் நடித்து வருகிறார். ரவி பிரியன் இயக்கும் இந்த சீரியல், அம்மனின் அருள் பெற்ற ஒரு பெண்ணுக்கு எதிராக நடைபெறும் சதிவேலைகளை சக்தி எவ்வாறு முறியடிக்கிறாள் என்பதை நோக்கி செல்கிறது. இந்த சீரியலை ஐ.அஹ்மத் தயாரித்து வருகிறார்.

‘அம்மன்’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !…

சுவாரஸ்யங்கள் நிறைந்து இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கதைப்படி சக்தியை காப்பாற்ற, காட்டுக்குள் செல்லும் ஈஸ்வர், சிவனுக்கு பூஜை செய்யும் ருத்ரா என்ற பெண்ணை தேடுகிறார். இந்நிலையில் இந்த கேரக்டரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இணைந்துள்ளார் சம்யுக்தா. ருத்ரா கேரக்டரில் நடித்து வரும் இவர், பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story