ஹிரித்திக் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து.. ‘வேதா’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் பிறந்தநாளையொட்டி ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் படத்தின் ‘வேதா’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி மற்றும் மாதவர் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘விக்ரம் வேதா’. போலீஸ், கேங்ஸ்டர் என இரு கோணத்தில் பயணிக்கும் இருவரை ஒரு புள்ளியில் சந்திக்கும் வைக்கும் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்திய அளவில் பேசப்பட்ட இப்படத்தை பலமொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதலில் இந்தியிலும் இப்படம் ரீமேக்காகி வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இயக்கும் இப்படத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சயீப் அலிகான் இணைந்து நடிக்கின்றனர். சசிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் ரவுடியாக ஹிரித்திக்கும், போலீசாக சயீப் அலிகானும் நடித்து வருகின்றனர்.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. முழு படப்பிடிப்பும் லக்னோ பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், போலீசாக நடிக்கும் சயீப் அலிகான், தனது பகுதியை காட்சிகளின் படப்பிடிப்பை நிறைவுசெய்தார். இந்நிலையில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ‘வேதா’ ஃப்ர்ஸ்ட் லுக் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கெத்தான லுக்கில் ஹிரித்திக் ரோஷன் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.