ஃகோலியின் ஆட்டத்திற்கு அனுஷ்காவை இழுத்த கவாஸ்கர்… கொதித்தெழுந்த அனுஷ்கா!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா பற்றி பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கிங்ஸ் லெவேன் அணியுடன் மோதினர். அப்போது விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லாததால், கோலிக்கு பயிற்சி போதவில்லை, கொரோனா ஊரடங்கில் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பௌலிங்கில் மட்டும் தான் விளையாடியிருக்கிறார் போல” என்று கமெண்ட்ரி செய்தார். இந்த கமெண்ட்ரி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விராட் கோலியின் ரசிகர்கள் கவாஸ்கரை பயங்கரமாக ட்ரோல் செய்தனர்.
தற்போது அனுஷ்கா சர்மா கவாஸ்கரின் இந்த கூற்றுக்கு எதிரான தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “கவாஸ்கர், நீங்கள் கூறியது வெறுக்கத்தக்கது, ஆனால் கணவரின் விளையாட்டுக்காக அவரது மனைவி மீது ஏன் இவ்வளவு கடுமையான குற்றம் சாட்டி அறிக்கையை வெளியிட நினைத்தீர்கள் என்பதை விளக்க நான் விரும்புகிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நீங்கள் மதித்துள்ளீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அதே போல் நீங்கள் ஏன் எனக்கும் எங்களுக்கும் அதே மரியாதையை அளிக்கத் தவறினீர்கள்.
எனது கணவரின் விளையாட்டைப் பற்றிப் பேச உங்களுக்கு வேறு பல வார்த்தைகள் தெரியும் என்று நான் அறிவேன். இல்லை, எனது பெயரை பயன்படுத்தினால் தான் அவரது விளையாட்டைப் பற்றி துல்லியமாக உங்களால் சொல்ல முடியுமா?
இது 2020-ம் ஆண்டு, ஆனால் இன்னும் சில விஷயங்கள் எனக்கு நடப்பது மாறவில்லை. அவதூறான கருத்துக்கள் கூற எனது பெயர் உள்ளிழுக்கப்படுவது எப்போது நிறுத்தப்படும்? இந்த நாணயமான விளையாட்டில் இன்னும் உங்கள் பெயர் உயர்ந்து தான் இருக்கிறது. நீங்கள் கூறியதை கேட்ட பொழுது எனக்குத் தோன்றியவற்றை மட்டுமே உங்களுக்கு சொல்ல விரும்பினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த கவாஸ்கர் “நான் ஆபாசமாக ஏதும் கூறவில்லை. அந்த வீடியோவில் அனுஷ்கா விராட்டுக்கு பௌலிங் செய்தார். அதை தான் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.