ஷாருக் கான் மற்றும் டாப்ஸி கூட்டணியில் உருவாகும் புதிய பாலிவுட் படம்!
ஷாருக்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஷாருக் கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஷாருக்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் கூட்டணி அமைக்க இருப்பதாக நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துவிட்டதாம்.
முகேஷ் சாப்ராவுடன் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஹிரானி கவனித்து வருகிறார். நடிகை டாப்ஸி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. படம் புலம்பெயர்ந்தவர்களின் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி கனடாவில் படமாக்கப்பட உள்ளதாம். இந்தப் படம் 2022-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.