×

நல்லகண்ணு ஐயாவை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நல்லகண்ணு ஐயாவை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களுக்கு நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.