×

அனுஷ்கா நடித்த Ghaati  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டுகாதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. கிளிம்ப்ச் வீடியோவுக்கு ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேதம் படத்தை தொடர்ந்து இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் இரண்டாம் முறை அனுஷ்கா நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  <a href=https://youtube.com/embed/EHJRrXbKmx8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/EHJRrXbKmx8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">