பாலா - அருண் விஜய்யின் வணங்கான்.. ரசிகர்கள் விமர்சனம் என்ன..?
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்களை ஜிவி பிரகாஷ் இசை அமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்துள்ளார். இயக்குனர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வேளையில் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதலில் நடிகர் சூர்யா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சில காட்சிகளையும் நடித்திருந்தார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வணங்கான் அதன் காட்சிப்படுத்தல் மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றிற்காக பாராட்டைப் பெற்று வருகிறது.
மேலும் ஒரு ரசிகர், வணங்கான் ஒரு உணர்வுபூர்வமான பயணம், இயக்குனர் பாலாவின் பார்வையில், அருண்விஜய்யின் நடிப்பு மறக்க முடியாதது என குரிப்பிட்டுள்ளார்.