ஆனந்த் தேவரகொண்டாவின் அடுத்த பட அப்டேட்!

ஆனந்த் தேவரகொண்டாவின்  அடுத்த பட அப்டேட்!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா இரண்டாவதாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சகோதரர் ஆனந்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் மிடில் கிளாஸ் மெலடிஸ் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆனந்த் தேவரகொண்டாவின்  அடுத்த பட அப்டேட்!

தற்போது ஆனந்த் தேவரகொண்டா இரண்டாவதாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு ‘புஷ்பக விமானம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

காமெடி த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சான்வே மேகனா மற்றும் கீத் சைனி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆனந்த மற்ற அனைவரையும் தடுத்து நிறுத்துவது போல உள்ளது. எதோ ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்ற எத்தனிக்கும் போலவும் உள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Share this story