தளபதி 65 படத்தில் இணைந்த கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

தளபதி 65 படத்தில் இணைந்த கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தளபதி 65‘ படத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் விஜய்யின் 65வது படமாகும் உருவாகும். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 65 படத்தில் இணைந்த கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

தற்போது இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்பறிவ் சகோதரர்கள் பல படங்களில் அதிரடியான சண்டைக் காட்சிகளை கோரியோகிராப் செய்துள்ளனர். ‘கேஜிஎஃப்’ படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள் தான் சண்டைக் காட்சிகள் வடிவமைத்தனர். அந்தப் படத்தில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை வடவமைத்ததற்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தளபதி 65 படத்தில் இணைந்த கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

தற்போது அன்பறிவ் சகோதரர்கள் தளபதி 65 படத்தில் இணைந்திருப்பதால் படத்தில் வெறித்தனமான சண்டைக்காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story