பிரஷாந்த் நடிக்கும் அந்தாதுன் தமிழ் ரீமேக்… ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா!?

பிரஷாந்த் நடிக்கும் அந்தாதுன் தமிழ் ரீமேக்… ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா!?

நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் அந்தகன் படம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாசினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் 2018-ல் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதையடுத்து இப்படம் பல மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

பிரஷாந்த் நடிக்கும் அந்தாதுன் தமிழ் ரீமேக்… ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா!?

அந்தாதுன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். அந்தப் படத்தில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பிரெட்ரிக் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

director JJ Fredrick

ஜனவரி முதல் நாள் இப்படத்தின் டைட்டில் ‘அந்தக’ன் என அறிவித்தனர். பின்பு பட வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் படம் இன்னும் துவங்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே தியாகராஜன் படத்தில் வேலை செய்பவர்கள் நொந்துவிடுவார்கள் என்ற பேச்சு கோலிவுட்டில் உண்டு. அதுபோல இயக்குனர் ப்ரெட்ரிக் உட்பட படக்குழுவினர் பலரும் இந்தப் படத்தில் வேலை செய்ய தயக்கம் காண்பித்து வருகிறார்களாம். மேலும் பலர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் படம் உருவாவது சந்தேகம் தான் என்றும் பேசப்பட்டு வருகிறது.

Share this story