“என் பாட்டு நல்லாருக்குனு சொன்னா கூட கண்டுக்கமாட்டேன், ஆனா என் சமையல் பத்தி சொன்னா”… ஆன்ட்ரியா பதில்!

“என் பாட்டு நல்லாருக்குனு சொன்னா கூட கண்டுக்கமாட்டேன், ஆனா என் சமையல் பத்தி சொன்னா”… ஆன்ட்ரியா பதில்!

நடிகை ஆன்ட்ரியா ஊரடங்கு நாட்களில் தான் சமையல் செய்து கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆன்ட்ரியா தான் சமையல் செய்த உணவுகள், பாடல்கள், ஆகியவற்றை பகிர்ந்து வந்தார்.

தற்போது ஆன்ட்ரியா தான் செய்த சுவையான கேக்-களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லாக்டவுன் ஆரம்பித்த நாள்கள் முதல் சமையல் செய்ய கற்றுக்கொண்டதாகவும், தற்போது ஓரளவுக்கு கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“என் பாட்டு நல்லாருக்குனு சொன்னா கூட கண்டுக்கமாட்டேன், ஆனா என் சமையல் பத்தி சொன்னா”… ஆன்ட்ரியா பதில்!

தற்போது தான் லாக்டவுன் நாட்களில் செய்த அனைத்து கேக்குகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு இந்தப் பயணத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார்.

“என் வாழ்க்கை முழுவதிலும் யாராவது ஒருவர் என்னுடைய நடிப்பு அல்லது பாடலைப் பற்றி நன்றாக சொன்னால் மரியாதையாக சிரித்துவிட்டு கடந்து விடுவேன். மேலும் அவர்கள் புகழ்வது எனக்கு சற்று நெருடலாக இருக்கும். ஆனால் யாராவது எப்போதாவது நான் செய்த கேக் பற்றி பாராட்டினால் நான் மிகவும் உற்சாகமாகி விடுவேன். உண்மையாகவா? உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் மேடைகளில் நிகழ்ச்சியில் செய்து வருவதால் அப்படி இருக்கலாம். ஆனால் நான் ஒருபோதும் சமையல் அறைக்குள் நுழைந்ததில்லை. முதலில் இருந்து இந்த ஆறு மாதங்கள் வரை ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறன். இதுவரை நான் செய்த கேக்குகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story