Sunday, October 25, 2020

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம்...

Movie Stills

“டான்ஸ் மாஸ்டர்னா டான்ஸ் ஆடலாம்டா.. ஆணவத்துல ஆடாதீங்க” அனிதா சம்பத்தை கேலி செய்த நடன இயக்குனரைக் கடுமையாகச் சாடிய கணவர்!

அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் தன் மனைவியைப் பற்றி கேலி செய்யும் வகையில் பதிவிட்ட நடன இயக்குனருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வரும் அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அனிதா தான் கடந்து வந்த பாதை பற்றிப் பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “ஆமா ஆமா அனிதா ஓவர் தான். கதை மொத்தமாக தவறாகிவிட்டது. மன்னியுங்கள், கதை உணர்வுபூர்வமாகவும் இல்லை, சோகமாகவும் இல்லை. எல்லாரும் ஓடுவாங்க இப்படி விடாம பேசுனீனா. ஓடிக்கிட்டே இருங்கனு மாறி தான் தெரியுது. இந்தக் கொரோனா நமக்கு நிறைய பாடத்தைக் கத்துக் கொடுத்திருக்கு. அதனால தயவு செய்து அமைதியா இருங்க.” என்று தெரிவித்திருந்தார்.

சதீஷின் இந்தப் பதிவிற்கு பதிலளித்த அனிதாவின் கணவர் பிரபாகரன் “ஏன்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசிய தெரிய வாய்ப்பு இல்ல… ஆணவத்துல ஆடாதீங்க இப்படிதான் அடுத்தவன் அனுபவச்ச பசியையும் வலியும் கூட கிண்டல் பண்ண தோனும். பின்குறிப்பு: டான்ஸ் மாஸ்டர்னா டான்ஸ் ஆடலாம்டா.. ஆணவத்துல ஆடாதீங்க..” என்று கடுமையாகச் சாடி பதிலளித்திருந்தார்.

sathish

சோகமான ஸ்டோரி மத்தவங்க கிட்ட சொன்னா, அவங்களுக்கும் சோகமா தான் இருக்கும்னு நெனச்சா என்ன சொல்றது. இது சோகமான கதை நம்புங்கன்னு கணவனும் கெஞ்சினா என்ன சொல்லுறது. இவங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியல. அவங்க உள்ள அழுவுறதும், நீங்க வெளிய அழுவுறதும். எப்பா சாமி பிபி மாத்திரை வாங்கி வச்சுக்கோங்க” என்று சதீஷ் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

Latest Posts

ஜப்பான் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடத் தேர்தெடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம்!

ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம்...

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக...

சீட்பெல்ட்ட போட்டுக்கோங்க… நாங்க வர்றோம்… சூர்யாவின் அதிரடி அறிவிப்பு!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் அக்டோபர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில்...

விஜயதசமியில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்… ஜீவா- அருள்நிதி கூட்டணியின் அதிரடித் திரைப்படம்!

ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாகிறது. இயக்குனர் என் ராஜசேகர்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!