அஞ்சலி படத்தில் லெஸ்பியனாக நடிக்கவில்லை, ஆனால் ”லிப்லாக்” கொடுப்பது உண்மைதான் !

அஞ்சலி படத்தில் லெஸ்பியனாக நடிக்கவில்லை, ஆனால் ”லிப்லாக்” கொடுப்பது உண்மைதான் !

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாக இருக்கும் ”பாவ கதைகள்” அந்தாலஜி படத்தில், சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் நான்கு சிறந்த இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். இப்படத்தின் ட்ரைலரே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.

அஞ்சலி படத்தில் லெஸ்பியனாக நடிக்கவில்லை, ஆனால் ”லிப்லாக்” கொடுப்பது உண்மைதான் !

இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரனும்’ பகுதியில் அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அஞ்சலி லெஸ்பியன் கேரக்ட்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தயாரிப்பு தரப்பு தற்போது அந்த செய்தியை மறுத்துள்ளது.

அஞ்சலி படத்தில் லெஸ்பியனாக நடிக்கவில்லை, ஆனால் ”லிப்லாக்” கொடுப்பது உண்மைதான் !

அதன்படி, அஞ்சலியும் கல்கியும் லெஸ்பியன் கேரக்ட்டரில் நடிக்கவில்லை. படத்தின் போஸ்டர்களை பார்த்து அப்படி எண்ணவேண்டாம். படத்தில் அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருக்கும் தோழிகள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு சூழலில் அவர்கள் லிப்லாக் செய்வதைப்போன்று ஒரு காட்சியில் நடித்திருப்பர் அது எப்படிப்பட்ட சூழல் என்பது தான் கதையே என தெரிவித்துள்ளது.

Share this story